அண்ணனே !
மணிவண்ணனே!
அண்ணனுக்கு கவிஞர்
எழுதிய வரிகள்
மணி அண்ணனுக்கும்
எல்லோருக்கும் அண்ணனவன்
இல்லார்க்குச் செல்வமவன்
நல்லோர்கள் உள்ளமெல்லாம்
நாள்தோறும் வாழுபவன்
சொன்னால் மனம்பதைக்கும்
சொல்லவோ வாய்பதைக்கும்
தன்னந்தனிமையிலே
தானுறங்கப் போனானோ?
வங்கக்கடல் அலையே
வாய் மூடித் தூங்கும்
எங்கள்
தங்கத் தமிழ்மகனைத்
தாலாட்டிப் பாடினையோ ?
பாடு நீ பாடு !
பைந்தமிழர் நாடென்று
ஓடி உழைத்தமகன்
உறங்கட்டும் அமைதியிலே!
உறங்கட்டும் அமைதியிலே!
