நீயும் நானும்
ஒன்றாய்ப்
பார்த்த
வானம் !
நீயும் நானும்
ஒன்றாய்க்
கேட்ட
கானம் !
நீயும் நானும்
ஒன்றாய்
விளையாடிய
மைதானம் !
நீயும் நானும்
ஒன்றாய்க்
குளித்த
ஓடை !
நீயும் நானும்
ஒன்றாய்க்
குதித்த
தாத்தா வீட்டுத்
திண்ணை !
நீயும் நானும்
ஒன்றாய்ப்
படித்த
பள்ளி !
நீயும் நானும்
ஒன்றாய்
நடந்துவந்த
ஒத்தையடிப்பாதை !
நீயும் நானும்
ஒன்றாய்
நனைந்துவந்த
பொதிகை
மலைச்சாரல் !
நீயும் நானும்
ஒன்றாய்
அமர்ந்திருந்த
ஆலமரத்தின்
அடிக்கிளை !
நீயும் நானும்
ஒன்றாய்
ஊஞ்சலாடிய
ஒற்றைப்புளியமரம் !
நீயும் நானும்
ஒன்றாய்
ரசித்த
மலைக்கோவில் !
எனக்குள்
ஓராயிரம்
கனவுகளை
வளர்த்த
உன்
ஓர விழிப்பார்வை !
நீயும் நானும்
ஒன்றாய்
நீந்திப்பழகிய
நதிக்கரை !
எல்லாம்
என்
பக்கத்தில்
நீ மட்டும்
தூரத்தில் !