
ஆமை!
அங்கும் இங்கும்
அலைந்தாலும் அதன்
நினைவுகள் மட்டும்!
கரையோரத்தில்
கிடக்கும் -அதன்
முட்டைகள் மீது
தங்கிக்கிடப்பது மாதிரி!
நான்
அங்கும் இங்கும்
அலைந்தாலும்
என்
நினைவுகள் மட்டும்
உன்னிடத்திலேயே
தங்கித் தவிக்கிறது
காதலி!
என்
கடந்தகாலத்தின்
வசந்தகாலமே!
உன்னை
நினைக்கும்
போதெல்லாம்
இதயத்தில் கருவாகி!
கண்களில் உருவாகி!
கன்னங்களில்
நதியாகின்றதே
கண்ணீர்!
காதல் சொட்ட சொட்ட உங்க கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.பிரிவின் வலியையும் உணர முடிகிறது.
பதிலளிநீக்குபிரியாவிற்கு நன்றி!
பதிலளிநீக்கு