
ஓவியப்பாவையே!
உன்
நீவிய
கூந்தலில்
ஆவியைத்
தொலைத்துவிட்டு
அலைகின்றேன்
ராப்பகலாய் !
திண்ணையிலே
நீ
இருந்தாய் !
தெருவெல்லாம்
நான்
திரிந்தேன் !
காலம் கிழிக்கும்
உன்
ஞாபகங்கள் !
காவியம் பேசிய
உன்
கால்கொலுசு
மணிகள்!
ஜன்னல்
வழிவந்த
மின்னல்
பார்வைகள்!
இத்தனையும்
இதயக் கிடங்கில்
இன்னும்
பத்திரமாய் !
நீ
என்றும்
நெஞ்சில்
அழியாத
சித்திரமாய்!
அன்பு நண்பா, உங்கள் கவிதையில் சந்தநயம் அருமையாக உள்ளது!!
பதிலளிநீக்குஅன்பு நண்பர் வைகறையின் வாழ்த்துக்கு நன்றி !
பதிலளிநீக்கு