

இது
காதல் கடிதம்
என்று
காயப்பட்டுவிடாதே !
என்
கனிவான தோழியே !
நெஞ்ச அலைகளின்
நெருஞ்சிமுள்
விளையாட்டு !
குத்தினால்
ரத்தம் !
குலவினால்
முத்தம் !
குறிஞ்சிமலரே !
உன்னைக்
கண்டநாள் முதல்
உனக்கு
என்
இதயத்தில்
பூச்சூடி
பொட்டு வைத்து
அழகு பார்க்கிறேன் !
பட்டுவிடக்கூடாது
அந்த
பவளமலர்
என்ற
பரிதவிப்பால் !
பார்த்தவிழி
பார்த்தபடி
நிற்க !
நீர்த்தவிழி
வேர்த்தபடி
கக்க !
உன்
விழிகளில்
விலாசம்
தேடித்திரியும்
காதல் பறவை நான் !
சின்னத் தாமரையே !
செந்தூரத் தேன்மலரே !
சிந்திய
ரத்தமும்
முந்திய
யுத்தமும்
உன்
முகம் பார்க்கவே !
விடியும் வரை
காத்திருந்தாலும்
வடியும்
கண்ணீர்த் துளியில்
உன்
வண்ண முகம்
பார்த்திருப்பேன் !
மனம் இருந்தால்
சொல்லிவிடு !
மனம் இல்லையேல்
மன்னித்துவிடு !
//மனம் இருந்தால்
பதிலளிநீக்குசொல்லிவிடு !
மனம் இல்லையேல்
மன்னித்துவிடு ///
ஹ்ம்ம்ம்..
உண்மையில் அழகான காதல் கடிதம்..
வாழ்த்துக்கள்..!! :-))
வார்த்தை பிரயோகம் அழகு.. :-)
பதிலளிநீக்குஆனந்தியின் அன்பு நிறைந்த வாழ்த்துகளுக்கு நன்றி !
பதிலளிநீக்குSMS காலத்திலும் கடிதம் தான் அழகு என்பதை உணர்த்தியது இக்கவிதை!
பதிலளிநீக்குஅன்பு நண்பர் வைகறையின் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி !
பதிலளிநீக்குவரிகளை அமைத்த விதம் அருமை,
பதிலளிநீக்குஅர்த்தமாய், அழகாய் இருக்கிறது
nalla kavithai . but enakku thozhium illai kathalium illai.
பதிலளிநீக்கு