இளமை
பூத்துக் குலுங்குகின்ற
பருவத்தில்தான்
எத்தனை ! எத்தனை !
வண்ணக்கனவுகள் !
அந்நாளில்
எனக்குப்
பதினெட்டு !
நீயோ
பருவ மொட்டு !
பிரியமானவளே !
நான்
உன்னைப்
பார்த்திருக்கக்கூடாது !
பார்த்திருந்தாலும்
பேசியிருக்கக்கூடாது !
எங்கேயோ
பிறந்த
நீ
எங்கேயோ
பிறந்த
என்
உள்ளத்தில்
எத்தனை
காயங்களை
ஏற்படுத்திவிட்டாய் !
காதல்
என்றால்
கசப்பான
வார்த்தையென
நினைத்திருந்தேன் !
உன்னைப்
பார்க்கும் வரையில் !
ஆனால் -நீ
சிறகில்லாமல்
பறக்கும்
வித்தையை
என்
இதயத்திற்குக்
கற்றுக்கொடுத்தாய் !
கண்களால்
பேசும்
கலையை
என்
விழிகளுக்குக்
கற்றுக்கொடுத்தாய் !
ஆண்டுவிழா
மேடையில்
காற்றிலே
மிதந்துவந்த
கவிதையாய் ...
அழகுமலர்
நீ
ஆடவந்தாய் !
தளிர்மேனி
குலுங்க !
தண்டுக்கால்கள்
தாளமிட !
மலர்க்கரங்கள்
அசைய !
வந்ததே
என்
தங்கச்சிலை !
தந்ததே
எழில் சிந்தும்
புது
இன்பக்கலை !
அப்பப்பா !
எத்தனை
பாவங்கள் !
எத்தனை
அபிநயங்கள் !
ஒவ்வொரு
அசைவிலும்
என்
உயிர்
குடித்துப்போனாய் !
வீடுவந்த
பின்னும்
விடிய விடிய
என்
கண்ணுக்குள்
ஆடி
நெஞ்சுக்குள்
குடிபுகுந்தாய் !
உன்னை
மட்டுமே
சுற்றிப்
பறக்கும்
வண்டானதே !
என்
நினைவுகள் !
எரிமலையைக்
குளிரவைக்கும்
உன்
ஈரப் பார்வை !
மின்சாரம்
அறுந்து
விழுந்து
இருண்டு
கிடக்கும்
இரவில் !
நிலவொளியில்
எப்போதாவது
தலைகாட்டும்
உன்
ஆசைமுகம் !
எப்போதும்
நான்
பார்த்திருக்க
வரம்
ஒன்று
தருவாயா ?
என்
வடிவான
பேரழகி !
Thanks to j.j for coming and writing comment
பதிலளிநீக்கு